புதிதாக 16 வழித்தடத்தில் மினி பஸ் இயக்கம்
ஊட்டி: நீலகிரியில் புதிதாக, 27 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், 16 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,'நீலகிரியில் தற்போது புதிதாக, 16 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்ப உள்ளோம். அதிகபட்ச பயண துாரம் என்பது, 25 கி.மீ., துாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள்,மருத்துவமனைகள், நுாலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்டவை இருந்தால் அதுவரை பயணத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.