உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கலப்பு மலை காய்கறி விவசாயம்; அசத்தும் விவசாயிகள்

கலப்பு மலை காய்கறி விவசாயம்; அசத்தும் விவசாயிகள்

ஊட்டி; ஊட்டி அருகே கொல்லிமலை ஓர நள்ளி சுற்று வட்டாரத்தில் கலப்பு மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி அருகே, கொல்லிமலை ஓரநள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் மலை காய்கறி விவசாயத்தை பல ஏக்கரில் மேற்கொண்டு வருகின்றனர்.நடப்பாண்டு முதல் போக விவசாயத்திற்காக காந்தி பேட்டை மலைச்சரிவில் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பல ஏக்கரில், 'கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், பூண்டு, முட்டைகோஸ்,' என, பல ஏக்கரில் கலப்பு மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு போகத்திலும் சாகுபடி செய்யும் மலை காய்கறிகளை, வியாபாரிகள் தோட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு நேரடியாக கொள்முதல் செய்து லாரிகளில் எடுத்து செல்கின்றனர்.நடப்பாண்டு முதல் போகத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியுள்ளது. விதைப்பு பணி மேற்கொண்டு முளைத்துள்ள காய்கறி பயிர்களில் களை செடிகள் அகற்றி, உரமிட்டு பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். கோடை மழை தொடரும் பட்சத்தில் நல்ல விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ