உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மருத்துவமனையில் ரூ.15 கோடியில் கட்டடம்; நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் திறப்பு

மருத்துவமனையில் ரூ.15 கோடியில் கட்டடம்; நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் திறப்பு

கூடலுார்;கூடலுார் அரசு தலைமை மருத்துவமனையில், 15 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார். ஊட்டியில், 2022ல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துவங்கப்பட்டதை தொடர்ந்து, கூடலுார் தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, 31 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, 15 கோடி ரூபாய் மதிப்பில் அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு கூடுதல் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநில முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி மூலம் கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சுரேஷ் வரவேற்றார். மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் ராஜசேகர் தலைமை வகித்தார். அரசு கொறடா ராமச்சந்திரன் புதிய கட்டடங்களில் உள்ள, வசதிகள் பொது அறுவை சிகிச்சை மற்றும் கண் அறுவை சிகிச்சை அரங்குகளையும் ஆய்வு செய்த பின், நிருபர்களின் கூறுகையில், ''கூடலுார் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், 20 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தை, முதல்வர் திறந்து வைத்திருந்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் டாக்டர்கள் முழுமையாக உள்ளனர். கூடலுார் அரசு மருத்துவமனையில், புதிதாக, 28 டாக்டர்கள் பணியிடங்களை கேட்டுள்ளனர். அதற்கான உத்தரவு கிடைத்தவுடன் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்,'' என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் கூடலுார் எம்.எல்.ஏ., திராவிடமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ