உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை ஓய்ந்த நிலையில் கொசு கடி; சேற்று குளியல் போட்ட யானைகள்

மழை ஓய்ந்த நிலையில் கொசு கடி; சேற்று குளியல் போட்ட யானைகள்

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பால், யானைகள் சேற்று குளியல் போட்டது பார்வையாளர்களை கவர்ந்தது. பந்தலுார் அருகே சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், அதிகளவில் யானைகள் முகா மிட்டுள்ளன. அதில், 'கோல்ஸ்லேண்ட்' தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டி, எஸ்டேட்டுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது.மேய்ச்சலில் ஈடுபட்ட யானைகள், கொசு தொல்லை அதிகரிப்பால் அருகில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில், சிறிய குழி உருவாக்கி அதில் உள்ள சேற்றை உடலில் பூசி கொண்டன. யானைகள் சேற்றில் படுத்து தங்கள் உடலில் சேற்றை பூசி கொண்டது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க, பாதுகாக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி