சாலையில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் திணறல்
ஊட்டி: ஊட்டி காந்தள் முக்கோணம் சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட படகு இல்லம் சாலை வழியாக முக்கோணத்திற்கு செல்லும் சாலையில் அரசு பஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் தேங்கியுள்ள மழை நீர் வழிந்தோட போதிய வடிகால் வசதி இல்லை. சமீபத்தில் பெய்த மழைக்கு சாலையில் தேங்கியுள்ள மழை நீரால், வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.