உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குண்டும் குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் திணறல்

குண்டும் குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் திணறல்

ஊட்டி: குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். ஊட்டி அருகே, பாலகொலா கிராமத்திலிருந்து பரமுலா, காத்தாடி மட்டம், மீக்கேரி, பி. மணிஹட்டி , தங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை வசதி உள்ளது. பால கொலா கிராம மையப் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை சமயத்தில் தண்ணீர் தேங்கி சாலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !