உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டேரி பூங்காவில் முதல் முறையாக மலை பயிர் கண்காட்சி

காட்டேரி பூங்காவில் முதல் முறையாக மலை பயிர் கண்காட்சி

குன்னுார்; குன்னுார் காட்டேரி பூங்காவில் முதல்முறையாக, மலைப்பயிர்கள் கண்காட்சி நடப்பதால், பூங்காவில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், பசுமை நிறைந்த மலைகள், தேயிலை தோட்டம், நீரோடை, ரன்னிமேடு ரயில் நிலையம் உள்ளிட்ட எழில் சூழ்ந்த இடத்தில் உள்ள காட்டேரி பூங்கா, அமைந்துள்ளது. குன்னுாரில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள காட்டேரி பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ஆண்டுதோறும் தோட்டக்கலை துறை சார்பில், நடக்கும் கோடை விழாவில், இதுவரை காட்டேரி பூங்காவிலும் கண்காட்சி நடத்தப்படவில்லை.முதல் முறையாக, நடப்பாண்டு காட்டேரி பூங்காவில், மலைப்பயிர்கள் கண்காட்சி மே, 31 மற்றும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இதற்காக, நீலகிரியின் நுழைவாயிலில் உள்ள இந்த பூங்காவை தயார்படுத்த ஏற்பாடுகள் துவங்கியது. கண்காட்சியின் போது, 'தேயிலை, காபி, ரப்பர் போன்ற பணப்பயிர்கள் மற்றும் தேங்காய், பனை, நுங்கு, இளநீர், கொக்கோ , பாக்கு,' உட்பட பல்வேறு வகை விளை பொருட்களும் அலங்கார வடிவமைப்புகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நிறைவு பெற்று மலர்களை வண்ண மயமாக வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை