உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மக்களை நுகர்வு கலாச்சாரத்தில் சிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

மக்களை நுகர்வு கலாச்சாரத்தில் சிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

கோத்தகிரி: கோத்தகிரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்துள்ள காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், சிறப்பு கருத்தாங்கு நடந்தது.விஷ்வ சாந்தி பள்ளி தாளாளர் சாய்பாபா தலைமை வகித்தார். தொழிலதிபர் போஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ''பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் கொடுக்கப்படுவதுடன், மூலிகை தோட்டம் அமைப்பது அவசியம்,'' என்றார்.கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி பேசுகையில்,''எளிமையான, சிக்கனமான வாழ்கை மட்டுமே காலநிலை மாற்றத்திற்கு உகந்தது,'' என்றார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ பேசியதாவது:பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்வதற்காகவே பொருட்களை தயாரிக்கின்றன.மக்களின் தேவையை குறித்து கவலை இல்லாமல், நுகர்வு கலாச்சாரத்தில் மக்களை சிக்க வைக்கின்றன.நுகர்வோர் வாங்கிய பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் உரிமை மறைமுகமாக மறுக்கப்படுகிறது. மக்களுக்கு பொருட்களை வாங்குவது தான் வாழ்க்கை என்ற நிலையை உருவாக்குகின்றன. தேவையற்ற ஆடம்பரமான பொருட்களின் உற்பத்தி கார்பனின் அளவை அதிகரிக்க காரணமாகிறது.வாரம் ஒரு நாள் இஸ்திரி போடாத துணியை போடுவதன் மூலம், 250 கிராம் கார்பன் டை ஆக்ஸைடை செய்து சேமிக்கலாம். மக்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை