குடிநீர் குழாயில் உடைப்பு சீரமைத்த நகராட்சி ஊழியர்கள்
ஊட்டி; ஊட்டி டைகர்ஹில் அணை அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணானது. ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளுக்கு டைகர் ஹில் அணையில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பெய்த மழையின் போது மேல் கோடப்பமந்து பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் டைகர்ஹில் அணையில் இருந்து வரும் ராட்சத குடிநீர் குழாய் உள்ளது. தற்போது இங்கு கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதிக அள வில் தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறி யது. அங்கிருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நகராட்சி ஊழியர்கள் அணையில் இருந்து வரும் தண்ணீரை நிறுத்தி உடைப்பு ஏற்பட்ட இடத்தை சீரமைத்தனர்.