உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாகம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

நாகம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

குன்னுார்; குன்னுார் இந்திரா நகர் நாகம்மன் கோவிலில் நடந்த பொங்கல் திருவிழாவில் அம்மன் தேர் ஊர்வலம் நடந்தது. குன்னுார் காந்திபுரம் அருகே இந்திரா நகர், நாகம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், அம்மன் நாக வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நாகம்மன் கோவிலை அடைந்தது. கேரள கலை குழுவினரின் காவடியாட்டம் உள்ளிட்டவை இடம் பெற்றன. பக்தர்கள் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை