உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

 தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

ஊட்டி: ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் பிராங்கிளின் ஜோஸ் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரபாவதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய நுகர்வோர் தினத்தின் முக்கியத்துவம், நுகர்வோரின் கடமைகள், குறைகள் இருப்பின், முறையிடுவதன் அவசியம், காலாவதியான உணவு பொருட் களை தவிர்ப்பது குறித்து, மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் நந்தகுமார், குன்னுார் மக்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகி மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்று தேசிய நுகர்வோர் தினம் குறித்து பேசினர். கல்லுாரி முதல்வர் முனைவர் ஜெயந்தி சதீஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, ஊட்டி அரசு கலைக் கல்லுாரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ