மேலும் செய்திகள்
சர்வதேச கராத்தே போட்டி மாணவர்களுக்கு பாராட்டு
11-Oct-2025
குன்னூர்: -குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். குன்னூர் ஆலன் திலக் பள்ளிக்குட்பட்ட, பெரிய பிக்கட்டி பிளாக் நிஞ்சா கராத்தே கிளப் மாணவர்கள் திரண்குமார், தனிஷ்கா, புனிதா மற்றும் ஜனார்த் ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான 69வது கராத்தே போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில்,இரண்டாம் இடம் பிடித்த அருவங்காடு டெம்ஸ் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஜனார்த், தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவருக்கும், பயிற்சி அளித்த பிளாக் நிஞ்சா கராத்தே கிளப் பயிற்சியாளர்களுக்கும், ஆலன் திலக் கராத்தே பள்ளி தலைவர் செல்வம், முதன்மை கராத்தே பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
11-Oct-2025