உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தேசிய நுாலக வார விழா மருத்துவ முகாம்

 தேசிய நுாலக வார விழா மருத்துவ முகாம்

பந்தலுார்: தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, பந்தலுார் நுாலகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, 'ஆல் தி சில்ட்ரன் டிரஸ்ட்' இணைந்து, இலவச மருத்துவ முகாமினை நடத்தின. நுாலகர் அறிவழகன் வரவேற்றார். நுாலகர் நித்திய கல்யாணி தலைமை வகித்தார். கொளப்பள்ளி கிளை நுாலகர் முத்துசாமி, பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தனர். முகாமில், மருத்துவர் குழுவை சேர்ந்த டாக்டர் ஜெயின பத்திலா, மருந்து ஆளுனர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக அலுவலர் லாய்ஷான் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், விஜயன் சாமுவேல் மற்றும் நுாலக பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ