உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய செய்தித்தாள் தினம்; ஆர்வத்துடன் வாசித்த மாணவர்கள்

தேசிய செய்தித்தாள் தினம்; ஆர்வத்துடன் வாசித்த மாணவர்கள்

கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய செய்தித்தாள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், செய்தித்தாள்களின் தோற்றம், முக்கியத்துவம், வளர்ச்சி மற்றும் செய்தித்தாள் படிப்பதன் மூலம், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதுடன், வாசிப்பு திறன் மேம்படுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் உட்பட, பல்வேறு நாளிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் வாசிப்பு, செய்தி தகவல்கள் சோதிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.இதில், 'எதிர் வரும் நாட்களில் பாட புத்தகத்துடன், செய்தித்தாள்கள் வாசிப்பேன்,' என, மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை