உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் நகரில் நடந்த தேசிய இளைஞர் தினம்

ஊட்டியில் நகரில் நடந்த தேசிய இளைஞர் தினம்

ஊட்டி; ஊட்டியில் விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. ஊட்டி ஐந்துலாந்தர் பகுதியில் ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி தினம், தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக ஹிந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணி பங்கேற்றார். மாவட்ட பொருளாளர் கார்த்தி போதை விழிப்புணர்வு குறித்து பேசினார். நகர செயலாளர் ரமேஷ் வினோத் இளைஞர் முன்னணி பொறுப்பாளர் தாமோதரன், குரு ராகேஷ் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி