மேலும் செய்திகள்
பள்ளிகளில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்
15-Jan-2025
கோத்தகிரி, ; கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், 128 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்து,நேதாஜியின் சுதந்திர போராட்ட பங்கு, அவரதுவீர வரலாற்று மற்றும் அவர் அமைத்த தேசிய மாணவர் படை குறித்து நினைவு கூர்ந்தார். பள்ளி மாணவர்களுக்கு நேதாஜி குறித்து, பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதில், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
15-Jan-2025