உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொழிலாளர்களுக்கு இரவு நேர ரத்த பரிசோதனை

தொழிலாளர்களுக்கு இரவு நேர ரத்த பரிசோதனை

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட மருத்துவத்துறை, நடமாடும் புலம்பெயர்வோர் பரிசோதனை குழு மற்றும் நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இரவு நேர ரத்த பரிசோதனை முகாமை நடத்தின. ஓரியண்டல் எஸ்டேட் அங்கன்வாடி மையக் கட்டடத்தில், இரவு 9:00 மணிக்கு நடந்த முகாமில், மேற்கு வங்கத்தை சேர்ந்த, 50 தொழிலாளர்களுக்கு மலேரியா மற்றும் யானைக்கால் நோய் கண்டறிதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தொற்று கண்டறிதலுக்கான ரத்த மாதிரிகளை சேகரித்தனர். முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி