உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூப்பர்காடு பள்ளியில் விழா

மூப்பர்காடு பள்ளியில் விழா

குன்னூர் : குன்னூர் அருகேயுள்ள மூப்பர்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி புரவலர் சார்பில் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் கிராமக் கல்வி குழு தலைவர் ராஜூ கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஓய்வு பெற்ற தலை­மையாசிரியர் ஆரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பள்ளி புரவலர் குமார் விஜயலட்சுமி, 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீருடைகளை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்­கினார். மக்கள் நலப்பணியாளர் விவேக், ஜான், காயத்ரி பேசினர். ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை