மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஊட்டி நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி நேற்று துவங்கியது.நீலகிரி கலெக்டர் உத்தரவின் படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊட்டி நகராட்சியில் 3 நாள் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று கமிஷனர் குமார் தலைமையில், ஊட்டி ஏ.டி.சி., திறந்த வெளி கால்வாய்; மணிகூண்டு முதல் மாரியம்மன் கோவில்; சாட்லைன் முதல் பாம்பே கேசில் வரையில் துப்புரவு பணி நடந்தது. நகர் நல அலுவலர் பானுமதி தலைமையில் பிங்கர்போஸ்ட் முதல் எச்.பி.எப்., வரையிலும், ஸ்டேட் வங்கி காலனியிலும், நகராட்சி பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் புதுமந்து போலீஸ் குடியிருப்பு மற்றும் பேண்ட்லைன் பகுதிகளில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இன்றும், நாளையும் இப்பணிகள் ஊட்டியின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கிறது.
03-Oct-2025