உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் பார்த்தீனியம் செடி அகற்ற நடவடிக்கை இல்லை

சாலையில் பார்த்தீனியம் செடி அகற்ற நடவடிக்கை இல்லை

கோத்தகிரி, ; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், சாலையோரங்களில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்றாததால், பாதிப்பு அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில், சமீப காலமாக பார்த்தீனியம் களை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும் இந்த செடிகளால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதிர்ந்த பார்த்தீனியம் பூக்களில் இருந்து, காற்று மூலமாக எளிதில் பரவும் தன்மை கொண்ட இந்த செடிகள், வேறு தாவரங்கள் வளர்வதற்கு தடை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, விவசாய நிலங்களில் பயிர்கள் செழித்து வளர விடாமல் தடுக்கும் தன்மை கொண்டது. தவிர, ஜீவ பிராணிகள் உட்பட, வன விலங்குகளின் வாழ்விடங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அவைகளில் உடல் உபாதைக்கு இந்த செடிகள் வழி வகுக்கின்றன. எனவே, விஷ தன்மை கொண்ட, பார்த்தீனியம் செடிகளை வேரோடு அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசர,அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை