உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு இல்லை

தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு இல்லை

குன்னுார்; குன்னுார் ரயில் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், புதர்செடிகள் அகற்றப்படாமல் உள்ளதால், நடந்து செல்லும் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.குன்னுார் ரயில் நிலையத்தில் இருந்து 'லெவல் கிராசிங்' பஸ் ஸ்டாப் வரை, தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் புதர்செடிகள் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் ஒதுங்க முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சிரமப்படுகின்றனர். மழை காலத்தில் மழை நீர் சாலையில் ஓடுகிறது. நெடுஞ்சாலைதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ