உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் கொத்து கொத்தாய் காய்த்துள்ள நாவல் பழங்கள்; பறவைகளின் உணவு தேவை பூர்த்தியாகும்

கூடலுாரில் கொத்து கொத்தாய் காய்த்துள்ள நாவல் பழங்கள்; பறவைகளின் உணவு தேவை பூர்த்தியாகும்

கூடலுார்; கூடலுாரில் காடுகள் மற்றும் சாலையோர மரங்களில் கொத்து கொத்தாய் காய்த்துள்ள நாவல் பழங்கள் பறவைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.கூடலுார் பகுதியில் பலாப்பழம், நாட்டு கொய்யா, நாவல் பழம், அயனி பலா உள்ளிட்ட பழங்கள் சீசன் காலங்களில் பறவைகள், வனவிலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது, பருவமழை துவங்கியுள்ள நிலையில், இவ்வகை பழங்கள் பறவைகள், வனவிலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.அதில், ஜீன்பூல் தாவர மையம், காடுகள், சாலையோரங்கள், தனியார் எஸ்டேட் பகுதிகளில் உள்ள மரங்களில், கொத்து கொத்தாய் நாவல் பழங்கள் காய்த்துள்ளன. பறவைகள், குரங்குகள் போன்ற உணவு உயிரினங்கள் இதனை விரும்பி உட்கொள்கின்றன.கரடிக்கும் விருப்ப உணவாக உள்ளது. மேலும், மரங்களில் அருகே, விழுந்து கிடக்கும், பழங்களை சில நேரங்களில் யானைகளும் எடுத்து உண்டு செல்கின்றன. உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இருக்க இந்த பழங்களை, உள்ளூர் மக்களும் பறித்து உண்டு வருகின்றனர்.இதனிடையே, கர்நாடகவை சேர்ந்த, வியாபாரிகள் கர்நாடகாவில் இருந்து, நாவல் பழங்களை எடுத்து வந்து கிலோ, 200 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'வனங்களில் காய்த்துள்ள நாவல் பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆக., மாதம் வரை சீசன் இருக்கும். வனத்துறையினர், இதன் நாற்றுகளை உற்பத்தி செய்து வனப்பகுதியில் நடவு செய்தால், எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை