உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

கோத்தகிரி: கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. மாணவர்கள் பள்ளி வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் முட்செடிகளை அகற்றி, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி வளாகம் உட்பட, பொது இடங்களில் மரங்கள் நடவு செய்யப்பட்டு, பொது மக்களிடம் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒரு வாரம் நடந்த முகாமின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி தலைமை வகித்தார். பள்ளி பி.டி.ஏ., தலைவர் ராமச்சந்திரன், தும்மனட்டி கிராம தலைவர் நடராஜ், செயலாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்து பள்ளி மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதுநிலை ஆசிரியர் தேவராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி