உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மணிகூண்டு பஸ் ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடால் பயணியர் அவதி

ஊட்டி மணிகூண்டு பஸ் ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடால் பயணியர் அவதி

ஊட்டி; 'ஊட்டி நகரில் மணிகூண்டு பஸ் ஸ்டாண்டில் அவல நிலையை அதிகாரிகள் ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி மணிகூண்டு அருகே உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கடநாடு, அணிக்கொரை, எப்பநாடு, தொரை ஹட்டி, சின்ன குன்னுார், காவிலோரை, கெங்கமுடி சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தினமும், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணியர் கிராமங்களுக்கு செல்ல அப்பகுதியில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வருகின்றனர்.

சுகாதார சீர்கேடு

இங்கு இரவு நேரத்தில் சுற்றி திரியும் மது பிரியர்கள், மது அருந்தி அங்கேயே காலி பாட்டில்களை வீசி எறிந்துள்ளனர். கோழி கழிவு பெட்டிகளை பயணியர் நிற்கும் பகுதியில் வைப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அரசு பஸ் நிறுத்தும் இடத்தில் தனியார் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி செல்வதால் பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசார், நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, பகுதியை துாய்மைபடுத்தவும், வாகனங்களை முறையாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !