உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பை மேடாக மாறி வரும் ஊட்டி சாலை

குப்பை மேடாக மாறி வரும் ஊட்டி சாலை

மேட்டுப்பாளையம்; ஊட்டி சாலையின் ஓரத்தில், மக்கள் குப்பைகளை கொட்டி, குப்பை மேடாக மாற்றி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டதாகும். தினமும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் ஊட்டிக்கு சென்று வருகின்றன. இந்த வாகனங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.ஊட்டி சாலையில் கன்னிமார் கோவில் அருகே, சாலை அகலமாக உள்ளது. தார் சாலை இல்லாத இடம் மண் பகுதியாக உள்ளது. இந்த இடத்தில், பழைய வீடுகளை இடித்த கழிவு மண்ணையும், பொருட்களையும், குப்பைகளையும் மக்கள் கொட்டி வருகின்றனர். இந்த இடம் தற்போது குப்பைமேடாக மாறி வருகிறது. இதனால் சுகாதாரம் இல்லாத பகுதியாக உள்ளது.குப்பைகள் குவிந்து கிடக்கும் இடத்தில் இருந்து, 50 அடி தூரத்தில் கன்னிமார் கோவில் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஊட்டி சாலையில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு, சாலையில் குப்பைகள் யாரும் கொட்டாதவாறு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ