உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி சுற்றுலா தலங்களில் பயணியர் வருகை குறைவு

ஊட்டி சுற்றுலா தலங்களில் பயணியர் வருகை குறைவு

ஊட்டி; ஊட்டியில் நிலவும் காலநிலை மாற்றத்தால் சுற்றுலா பயணியரின் வருகை குறைந்துள்ளது. நீலகிரியில் கடந்த இரண்டு நாட்களாக கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்ல ஏரி உட்பட முக்கிய சுற்றுலா தலங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது. கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணியர் குளிரில் அவதிப்பட்டனர். தாவரவியல் பூங்காவில், குல்லா, ஸ்வெட்டர் உட்பட வெம்மை ஆடைகள் மற்றும் குடையுடன் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ