உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ. 12 லட்சத்தில் நிழல் குடைகள் திறப்பு விரைவில் மினி பஸ் சேவைக்கு ஏற்பாடு

ரூ. 12 லட்சத்தில் நிழல் குடைகள் திறப்பு விரைவில் மினி பஸ் சேவைக்கு ஏற்பாடு

ஊட்டி,;நீலகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்பு நோயாளிகளின் வசதிக்காக புதிய நிழற்குடைகள் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ தேவைக்காக, கோவை அல்லது கேரள மாநிலம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க, ஊட்டி பட்பயர் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 143.69 கோடி ரூபாய் மதிப்பில், 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டது. மருத்துவமனையில் 'எம்.ஆர்.ஐ.,-சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே' போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும், 12 அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளன. பழங்குடி மக்களுக்கென தனியாக, 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மருத்துவமனைக்கு தினசரி, 800க்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் வந்து செல்கின்றனர். கல்லுாரி முன் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டனர். உடனடியாக நிழற்குடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நீலகிரி தொகுதி எம்.பி., நிதியின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இருபுறமும் நிழற்குடைகள் கட்டப்பட்டு வந்தது. பணிகள் முடிந்து நிழற்குடைகளை எம்.பி.ராஜா, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.மருத்துவக் கல்லுாரிக்கு தனியாக விரைவில் மினி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி