உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மைதானத்திற்குள் கழிவு நீர் குழாய் பதிக்க எதிர்ப்பு

மைதானத்திற்குள் கழிவு நீர் குழாய் பதிக்க எதிர்ப்பு

ஊட்டி, ; அரசுக்கு சொந்தமான மைதானத்திற்குள் கழிவு நீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டு நகராட்சி சார்பில் ஊட்டி நகரில், 10 இடங்களில் , 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில்,ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் எதிரே நவீன கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. கழிப்பிடத்தை ஒட்டி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு கழிப்பிடத்தின் கழிவு நீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மைதானத்தின் உட்புறத்தில் கழிவுநீர் குழாய்கள் பதித்தால், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால், அரசு பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை