மேலும் செய்திகள்
சாலையோர மண் அரிப்பு: விபத்து ஏற்படும் ஆபத்து
20-Aug-2025
கூடலுார், ; கூடலுார் நகரில் மழைநீர் வழிந்தோட கால்வாய் இல்லாததால் சாலை சேதமடைந்து வருகிறது. கூடலுார் நகரில் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல கால்வாயுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயை சரியாக பராமரிக்காத காரணத்தால், மழைநீர் செல்ல வழி இன்றி சாலையில் செல்கிறது. இதனால், ஏற்கனவே சேதமடைந்துள்ள சாலை, மேலும் சேதமடைந்து வருகிறது. நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது, நகரின் பல இடங்களில் மழை நீர் சாலையில் சென்றது. சில பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால், மக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் இயக்கவும் சிரமப்பட்டனர். அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்தனர். பொதுமக்கள் கூறுகையில், 'நகரில், கழிவுநீர் கால்வாயை பராமரிக்காத காரணத்தால், மழைநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
20-Aug-2025