உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூன்று சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

மூன்று சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

ஊட்டி : ஊட்டி நகரில் மூன்று இடங்களில் இடையூறாக வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகரில் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, சீசன் சமயங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியது. சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இ - பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது.இதற்கிடையே, சமீபத்தில் ஊட்டியில் சுற்றுலா பயணியரின் வசதிக்காக கமர்சியல் சாலையிலிருந்து கேசினோ சந்திப்பு வரை 'வாக்கிங்--வே' துவக்கப்பட்டது. பின், அங்கு கட்டண முறையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஊட்டியில் சில முக்கிய சாலைகளில் வாகனங்கள் இருப்புறம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எஸ்.பி., நிஷா கூறுகையில், ''ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலையாட்டி மந்து, பழைய தாவரவியல் பூங்காசாலை, ரோஸ் கார்டன் சாலைகளில் இருப்புறம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து அங்கு தேவையில்லாமல் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் போக்குவரத்து நெரிசல் உள்ள பிற இடங்களிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை