உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி -- ஊட்டி இடையே போதிய பஸ் இயக்காததால் பயணிகள் தவிப்பு

கோத்தகிரி -- ஊட்டி இடையே போதிய பஸ் இயக்காததால் பயணிகள் தவிப்பு

கோத்தகிரி,; கோத்தகிரி - ஊட்டி இடையே, அரசு பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றது. கடந்த காலங்களில், 30 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சமீப காலமாக, கோத்தகிரி மற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கிளையில் இருந்து, இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, கட்டபெட்டு, பாக்கியநகர், அம்பேத்கர் நகர், மடித்துறை, பேரார் மற்றும் மைனால் சந்திப்பு பகுதிகளில் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்தும், ஒரு பஸ் கூட வரவில்லை. இதனால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், கோத்தகிரி வழியாக, தனியார் வாகனங்களில் ஊட்டிக்கு சென்ற, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், தொட்டபெட்டா ஜங்ஷன் முதல், மதுவானா வரை, அணிவகுத்து நின்ற வாகனத்தால் நீண்ட நேரம் காத்திருந்து அதிருப்தி அடைந்தனர். மக்கள் கூறுகையில், 'ஊட்டி மற்றும் கோத்தகிரி வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை, கோடை விழா நிறைவடையும் வரை குறைக்காமல், குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும். தொட்டபெட்டா முதல் ஊட்டி சேரிங்கிராஸ் வரை போக்குவரத்தை சீர்படுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை