உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்

 பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்

பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில், ஆண் யானை ஒன்று தனியாக உலா வருகிறது. பகல் நேரங்களில் புதர்களில் படுத்து ஓய்வெடுக்கும் இந்த யானை, இரவு ஏழு மணிக்கு மேல் குடியிருப்பு பகுதியில் மற்றும் சாலைகளில் உலா வருவது வழக்கமாக கொண்டு உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, நெலாக்கோட்டை பஜார் சாலையில் யானை நடந்து வந்தது. அப்போது எதிரே அரசு பஸ் வந்த நிலையில், யானையை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தி உள்ளார். பஸ்சை நோட்டமிட்ட யானை, பக்கவாட்டு கண்ணாடியை லேசாக தள்ளிவிட்டு, பஸ்சின் ஓரப்பகுதியில் நடந்து சென்றது. அப்போது நின்று பஸ்சுக்குள் இருந்த பயணிகளை நோட்டமிட்டது. அனைவரும் அச்சமடைந்தனர். சிறிது நேரம் நின்று வனப்பகுதிக்குள் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை