உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ. 3.16 கோடி மதிப்பில் 73 பயனாளிகளுக்கு பட்டா

ரூ. 3.16 கோடி மதிப்பில் 73 பயனாளிகளுக்கு பட்டா

கூடலுார்; கூடலுாரில் வசிக்கும், 73 பயனாளிகளுக்கு 3.16 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பட்டா வழங்கப்பட்டது. கூடலுார் நாடார் திருமண மண்டபத்தில் வருவாய் துறை சார்பில், தாயகம் திரும்பியோர் கடனுக்காக வழங்கிய நிலப்பத்திரம் திரும்பி ஒப்படைத்தல் மற்றும் இலவச பட்டா வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் துறை அலுவலர் நாராயணன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, 73 பயனாளிகளுக்கு 3.16 கோடி ரூபாய் மதிப்பிலான இணையவழி இலவச பட்டா; 211 தாயகம் திரும்பியோர் கடனுக்காக வழங்கிய நிலப் பத்திரங்களை திருப்பி வழங்கினார். விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி உட்பட பலர் பங்கேற்றனர். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை