குண்டும் குழியுமான சாலையால் பாட்டவயல் பகுதி மக்கள் அவதி
பந்தலுார்; பந்தலுார் அருகே மாநில எல்லைப்பகுதியான, பாட்டவயல் மற்றும் பிதர்காடு பகுதிகளுக்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் சாலைகள் சேதமடைந்து பல ஆண்டுகள் கடந்தும், சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பந்தலுார் பாட்டவயல் பகுதியிலிருந்து, மானிவயல், செண்பகபாளி, கருக்கன்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தார் சாலை அமைந்துள்ளது. இந்த சாலைகள் முழுவதும் பெயர்ந்து, குழிகளாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.இந்த வழியாக இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும் நிலையில், காலை நேரத்தில், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை தொடர்கிறது. இந்த பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், சாலையை சீரமைக்க வலியுறுத்தி மக்கள், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.