உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்த நடைபாதை பாதசாரிகள் அதிருப்தி

சேதமடைந்த நடைபாதை பாதசாரிகள் அதிருப்தி

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை சாலையில் பயன்படுத்த முடியாத வகையில், கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை சேதமடைந்துள்ளதால், மக்கள் சாலையில் நடந்து செல்ல துவங்கியுள்ளனர். கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியிலிருந்து தேவர்சோலை சாலை பிரிந்து செல்கிறது. ரவுண்டானா முதல் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை செல்லும் சாலை வரை, 150 மீட்டர் துாரம் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் டாஸ்மார்க் மதுகடை செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால், மக்கள் நடந்து செல்ல, நடைபாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். நடைபாதை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பல இடங்களில் சேதமடைந்துள்ளது. மேலும் கால்வாயினுள் மண் நிரம்பி கழிவு நீர், மழை நீர் வழிந்தொட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. சேதமடைந்த பகுதிகளில் நடந்து செல்லும் மக்கள் விழுந்து காயமடையும் ஆபத்து உள்ளது. நடைபாதையை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க, சேதமடைந்த நடைபாதையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ