உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுமைக்கு திரும்பும் நேரு பூங்கா கண்டுகளிக்க மக்கள் ஆர்வம்

பசுமைக்கு திரும்பும் நேரு பூங்கா கண்டுகளிக்க மக்கள் ஆர்வம்

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்கா பசுமைக்கு திரும்பி வருவதால், உள்ளூர் மக்கள் கண்டுகளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. ஆண்டுதோறும், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்கின்றனர். கோத்தகிரி பேரூராட்சியாக இருந்த நிலையில், கூடுதல் பணியாளர்களுடன், பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நகராட்சிக்கு வருமானம் கருதி, ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக பணியாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், பூங்கா பராமரிப்பு பணி, ஓரளவு நடந்து வருகிறது. சமீபத்தில் பெய்த சாரல் மழையில், பூங்கா புல்தரை பசுமைக்கு திரும்பி வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் அதிகளவில் வருகின்றனர். இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி