உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த மக்கள்

முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த மக்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே மாநில எல்லை பகுதியான மாங்கோடு கிராமத்தில், நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கிராமப்புற மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பந்தலுார் மாங்கோடு கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு, வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் முன்னிலை வகித்தனர். முகாமில், மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்த விண்ணப்பங்களை அளித்தனர். அதில், பங்கேற்ற பெரும்பாலான மக்கள் உடல் நிலை குறித்து, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ