பாலத்தை ஒட்டி நிரந்தர தடுப்பு அவசியம்
கூடலூர்: கூடலூர், துப்புக்குட்டிபேட்டை அருகே, விபத்தை தடுக்க பாலத்தை ஒட்டி நிரந்தர தடுப்பு அமைக்க வலியுறுத்தியுள்ளனர். கூடலூர், துப்புக்குட்டிபேட்டை அருகே, காசிம்வயல் பகுதியில் இருந்து வரும் நீரோடை, தண்ணீர் சாலையை கடந்து செல்ல, கோழிக்கோடு சாலை நடுவே பாலம் அமைத்துள்ளனர். பாலத்தின் ஒரு பகுதியில் அமைத்திருந்த தடுப்பு முற்றிலும் சேதமடைந்தது. அப்பகுதியில் வாகன விபத்துக்கள் தடுக்க தற்காலிகமாக தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால், அவை பாதுகாப்பானதாக இல்லை. அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, பாலத்தை ஒட்டி பாதுகாப்பான தடுப்பு அமைக்க வலியுறுத்தியுள்ளனர். ஓட்டுனர்கள் கூறுகையில், 'பாலத்தை ஒட்டி, சேதமடைந்த தடுப்புகளுக்கு, மாற்றாக அமைத்துள்ள தற்காலிக தடுப்புகள் பாதுகாப்பானதாக இல்லை. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே அப்பகுதியில், நிரந்தரமான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.