உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டக்கலை பூங்காவில் சூட்டிங் நடத்த அனுமதி

தோட்டக்கலை பூங்காவில் சூட்டிங் நடத்த அனுமதி

ஊட்டி; தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட, 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஏப்., மே, ஜூன் ஆகிய மாதங்கள் கோடை சீசனாகும். சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடை சீசனை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா உட்பட தோட்ட கலை துறைக்கு சொந்தமான, 7 முக்கிய சுற்றுலா தலங்களில் ஏப்., முதல் ஜூன் மாதம் இறுதி வரை, மூன்று மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டகலை துறை தடைவிதித்து இருந்தது. தற்போது, படப்பிடிப்பிற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்புற்கு அனுமதி தேவைப்படுபவர்கள், தோட்டகலை அலுவலகத்தை அணுகலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !