உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்

வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்

பந்தலுார்:பந்தலுார் அருகே, வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாயை உள்ளூர் மக்கள் பாராட்டினர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு பனஞ்சிரா நேதாஜி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் முன்பக்க வாசலில் நின்றிருந்த நாயை, சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றது. அப்போது, தொடர்ந்து குரைத்த நாயை பிடிக்க முயன்றபோது, சிறுத்தையிடமிருந்து நாய் தப்பியது. சிறுத்தை மீண்டும் பிடிக்க முயன்றபோது, நாய் நேரடியாக நின்று குரைத்து, சிறுத்தையை எதிர்த்தது. சிறுத்தை திடீரென கேட்டிற்கு வெளியே குதித்து ஓடி தப்பியது. இதை அறிந்த மக்கள் வியப்படைந்தனர். அந்த நாயை பாராட்டினர். வீட்டின் உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில், “இப்பகுதிகளில் வன விலங்கு நடமாட்டம் அதிகளவில் உள்ளது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, எங்களை போன்றவர்களை வன விலங்குகள் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை