மேலும் செய்திகள்
மானியத்துடன் கடனுதவி
19-Sep-2025
ஊட்டி:இட பிரச்னைக்கு தீர்வு காண கோரி, நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபை கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபை தலைவர் குமார் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் பாறை முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம், ஆதிதிராவிட மகாஜன சபைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயம் அருகே உள்ள காலி இடம் ஆங்கிலேய காலம் முதல் வழிபாட்டிற்கும், ஈம காரியங்கள் செய்வதற்கும் பயன்படுத்தி வருகிறோம். மேலும், மூன்று சமுதாய மக்களான மராட்டி, பிள்ளை மற்றும் ஆதிதிராவிடர் பிரிவு இனத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த இடம் அரசால் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த இடத்தை, ஊட்டி நகராட்சி நிர்வாகம் காலி செய்ய கூறி உள்ளது. எனவே, இடத்தை ஆய்வு செய்து, சமுதாய காரியங்களுக்கு பயன்படும் இடம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19-Sep-2025