உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய கலெக்டரிடம் மனு

 டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய கலெக்டரிடம் மனு

ஊட்டி: ஊட்டி படகு இல்லத்தில், ஏழு 'இன்ஸ்டன்ட்' போட்டோகிராபர்கள், 38 ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். அவர்கள் அரசு நிர்ணயித்த, 4,593 ரூபாய் மாதாந்திர லைசென்ஸ் கட்டணத்தை ஆண்டுதோறும், முறையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பணிக்கு நேற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு காரணமாக, 38 ஆண்டுகளாக ஒரே தொழிலை நம்பிக்கையுடன் செய்து வந்த போட்டோகிராபர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், குடும்ப பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறை வேற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, இன்ஸ்டன்ட் போட்டோகிராபர்கள் நலன் கருதி, படகு இல்லம் நிர்வாகம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை, உடனடியாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ