| ADDED : பிப் 22, 2024 11:27 PM
மேட்டுப்பாளையம், பிப். 23--தேரோட்டத்துக்கு தயாராகும் தேர் அலங்காரம் செய்யும் பணிகளில், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, பெட்டத்தம்மன் மலையில் இருந்து, பெட்டத்தம்மன் அழைப்பு நடந்தது. மலை மீது, விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் திருவிழா முன்னிட்டு இன்று அதிகாலை 4:00 மணியிலிருந்து, 5:00 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். நாளை மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர் அலங்காரப் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா, குணசேகரன் மற்றும் கோவில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.