உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ‘நெல்லுக்கு மாற்றாக பாக்கு செடிகள் நடவு’

‘நெல்லுக்கு மாற்றாக பாக்கு செடிகள் நடவு’

கூடலூர்: கூடலூர் பகுதியில், காலம் மாறி பெய்யும் பருவமழை, வனவிலங்கு பாதிப்பால் வயல்களில் நெல்லுக்கு மாற்றாக பாக்கு மரங்கள் நடவு செய்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் நீண்ட கால பயன் தரும் தேயிலை, காபி போன்ற பயிர்களை தவிர, வயல்களில் கோடையில் காய்கறியும், பருவமழை காலத்தில் நெல் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக காலம் மாறி பெய்யும் பருவமழை, தொழிலாளர்கள் பற்றாக்குறை, எரிபொருள்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பல பகுதிகளில் நெல்லுக்கு மாற்றாக நேந்திரன் வாழை, இஞ்சி பயிரிட்டு வருகின்றனர். நெல் விவசாயம் குறைந்துள்ளது. இந்நிலையில், காட்டு யானைகள் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து நெற்பயர்களை பாதுகாக்க சிரமம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வயல்களில் பாக்கு மரங்கள், காபி செடிகள் நடவு செய்து வளர்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை