உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிளாஸ்டிக் விழிப்புணர்வு

பிளாஸ்டிக் விழிப்புணர்வு

கோத்தகிரி:கோத்தகிரி கே.பி.எஸ்., கல்லுார், என்.பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் தேவமாதா நர்சிங் கல்லுாரியில், பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து, தெரு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மத்திய மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு,'நெஸ்ட்' அறக்கட்டளை திட்ட இயக்குனர் ராம்தாஸ் தலைமை வகித்து பேசுகையில், ''இளைய தலைமுறையினரால் மட்டுமே, சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து, நீலகிரியை காக்க முடியும். பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, சூழலை பாதுகாக்க, மாணவர்கள் முன்வரவேண்டும்,'' என்றார். தொடர்ந்து, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தெரு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், 'லா' தொண்டு நிறுவன இயக்குனர் வெங்கடேசன் முன்னிலையில், துணி பைகள் வழங்கப்பட்டன. கல்லுாரி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்