மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
16-Oct-2025
குன்னுார்: கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரி என்.சி.சி., சார்பில் பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி விழிப்புணர்வு பிரசார மலையேற்றம் நடந்தது. கல்லுாரி இயக்குனர் டாக்டர் அருமைராஜ் துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் துவங்கிய இந்த மலையேற்ற பயணம் வேலிவியூ பீக் பாயின்ட் வரை, 10 கி.மீ., நடந்தது. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளை சேர்ந்த சீனியர் டிவிசன் மற்றும் சீனியர் விங் என்.சி.சி., மாணவ, மாணவியர் 70 பேர் பங்கேற்றனர். என்.சி.சி அதிகாரி லெப்டினன்ட் டாக்டர் மனோஜ் பிரபாகர் தலைமை வகித்தார். நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பசுமையான சூழல் ஏற்படுத்த துாய்மை விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
16-Oct-2025