உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சூட்டிங் மட்டத்தில் இதமான காலநிலை; சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

சூட்டிங் மட்டத்தில் இதமான காலநிலை; சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

ஊட்டி; ஊட்டி சூட்டிங் மட்டம் சூழல் மையத்தை ரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. அரசு தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா, படகு இல்லம், பைன் சோலை,பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கணிசமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வார நாட்களில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கிறது. இந்நிலையில், ஊட்டி- - கூடலுார் சாலையில் உள்ள சூட்டிங் மட்டம் பகுதிக்கு சுற்றுலா பயணியர் இயற்கை சாட்சிகளை ரசிக்க வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு நிலவும் இதமான காலநிலையை ரசிக்க கூட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் இங்குள்ள தோடர் பழங்குடியினரின் பல்வேறு கலை நயமிக்க படைப்புகளை கண்டு வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !