உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகன ஓட்டுனர்களுக்கு போலீஸ் அறிவுரை

வாகன ஓட்டுனர்களுக்கு போலீஸ் அறிவுரை

பந்தலுார்: பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில், வாகன ஓட்டுனர்களுக்கு போலீசார் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூடலுரில் இருந்து தேவர் சோலை வழியாக சுல்தான் பத்தேரி மற்றும் பந்தலூரில் இருந்து, குந்தலாடி வழியாக கேரளா செல்லும் சாலைகளின், சந்திப்பு பகுதியாக முக்கட்டி உள்ளது. இப்பகுதியில், உள்ளூர் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில், வேகமாக பயணிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நெலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஊர்காவல் படையை சேர்ந்த நைஜில் தலைமையிலான போலீசார், இப்பகுதியில் முகாமிட்டு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக சென்ற இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பிற மாநில வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில், போதை பொருட்கள் மற்றும் டாஸ்மாக் மது பாட்டில்கள் அதிகளவில் வாங்கி செல்லப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி