உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காணாமல் போனவர் சடலமாக மீட்பு போலீசார் தீவிர விசாரணை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு போலீசார் தீவிர விசாரணை

கோத்தகிரி, ;கோத்தகிரி அருகே காணாமல் போனவர், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.கோத்தகிரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் துரை,50. மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு செம்மனாரை பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் வீட்டிற்கு, சிகிச்சைக்காக அழைத்து சென்றவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை செம்மனாரை பகுதியில் உள்ள ஆற்றில் அழுகிய நிலையில் சடலமாக அவர் கிடந்துள்ளார்.போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ