உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீபாவளி பண்டிகைக்கு பரண் அமைத்து போலீசார் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகைக்கு பரண் அமைத்து போலீசார் கண்காணிப்பு

கூடலுார்: கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குற்றங்களை தடுக்க, போலீசார் பரண் அமைத்து கண்காணித்து வருகின்றனர். கூடலுார் பகுதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்தை சீரமைக்க, போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில், போலீசார் பரண் அமைத்து, ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை தேவர்சோலை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் கூறுகையில்,'கூடலுார் பகுதியில் தீபாவளி முன்னிட்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருப்பதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து சீரமைக்கவும் குற்றங்களை தடுக்கும் வகையில், பரண் அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை